
‘சைரா நரசிம்மா ரெட்டி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ராம்சரண் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி.
கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படம் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் 152-வது படமாகும்.
ஒளிப்பதிவாளராக திரு, கலை இயக்குநராக சுரேஷ் செல்வராஜன், இசையமைப்பாளராக மணிசர்மா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்தப் படத்தில் சிரஞ்சீவியுடன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் ராம் சரண் நடிப்பதாக இருந்தது. ஆனால், தேதி இல்லாமையால் அந்த முக்கியமான கதாபாத்திரத்தில் மகேஷ் பாபு நடிக்கிறார் .
மேலும், இதற்காக 30 நாட்கள் தேதிகள் ஒதுக்கியுள்ளார் மகேஷ் பாபு. தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் மகேஷ் பாபு, எவ்வித தயக்கமுமின்றி சிரஞ்சீவி படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதைத் தெலுங்கு திரையுலகினர் பெரும் ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள்.
[youtube-feed feed=1]