
அண்மையில் தான் வாங்கிய புதிய காருடன் விஜய் சேதுபதி அலுவலகத்திற்கு சென்று, அவரிடம் வாழ்த்துக்கள் பெற்றுள்ளார் மாஸ்டர் மகேந்திரன்.
லோகேஷ் கன்ன்கராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் மூலம் அங்கீகாரம் பெற்றவர் மகேந்திரன்.
3 வயதில் நடிக்க துவங்கிய மகேந்திரன் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 6 மொழிகளில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சாதனை படைத்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படத்தில், விஜய் சேதுபதியின் சிறு வயது பவானியாக நடித்ததன் மூலம் தற்போது பிரபலமாகி உள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் கார் வாங்கிய மகேந்திரன், தனக்கு நடிகர் என்ற அங்கீகாரத்தை பெற்று தந்த லோகேஷ் கனகராஜை கையோட ஷோருமிற்கு அழைத்து சென்று, அவர் கையால் கார் சாவியை வாங்கினார்.
நேற்று தனது புதிய காருடன் விஜய் சேதுபதியின் அலுவலகத்திற்கு சென்று அவரை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றுள்ளார் மகேந்திரன். அவரை மனதார பாராட்டிய விஜய் சேதுபதி, புதிய காரை எடுத்து ஒரு ரவுண்டும் அடித்துள்ளார்.
[youtube-feed feed=1]என்னோட பவானி…..🔥 @VijaySethuOffl na 🔱❤️#Bhavani #positivevibes #myenergy #vjs #love pic.twitter.com/vixvVmfTFX
— Master Mahendran 🔱 (@Actor_Mahendran) April 11, 2021