மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன்களான அனுராங் ஜெயின் மற்றும் தரங் ஜெயின் ஆகியோர் தங்கள் குடும்பத் தொழிலான மோட்டார் சைக்கிள் துறையில் ஈடுபட்டு பெரும் கோடீஸ்வரர்களாக வலம் வருகிறார்கள்.
மகாத்மா காந்தியின் ஐந்தாவது மகனாகக் கருதப்படுபவர் ஜமன்லால் பஜாஜ். பஜாஜ் மோட்டர் நிறுவனங்களின் நிறுவனர் இவர். இவரது மகள் வழி கொள்ளுப் பேரன்கள் அனுராங் ஜெயின் மற்றும் தரங் ஜெயின் ஆகியோர் அதே துறையில் ஈடுபட்டு முத்திரை பதித்துள்ளனர். . மோட்டார் வாகனங்களுக்கான உதிரிப் பாகங்கள் தயாரித்துத் தரும் தொழிற்கூடத்தை நடத்தி வருகிறார்கள்.
‘எண்ட்யூரன்ஸ்’ மற்றும் ‘வார்ரோக்’ ஆகிய இரண்டு நிறுவங்கள். இவை ‘வார்ரோக்’ அவுரங்காபாத்தினை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. ‘வார்ரோக் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 1.5 பில்லியன் டாலர்கள்! மற்றொரு நிறுவனமான ‘எண்ட்யூரன்ஸ்’ ஆண்டுக்கு இந்திய மதிப்பின்படி 55.7 பில்லியன் வருமானம் ஈட்டியுள்ளது!
உலகின் டாப்- 500 பணக்காரகளின் பட்டியலில் இவர்கள் இருவரும் இடம் பிடித்திருக்கிறார்கள்!
இன்னொரு விசயம்.. இந்த சகோதரர்கள் இரட்டையர்கள்!