ஜம்மு:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பேஸ்புக் போல, கேஷ்புக் என்ற சமூகவலைதளத்தை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார்  16 வயது சிறுவனான ஷாஃபீக்.

காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக சமூக வலைத்தளங்களின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஷாஃபீக், பேஸ்புக்கிற்கு மாற்றாக ‘கேஷ்புக்’ எனும் பெயரில் தனக்கென ஒரு சமூக வலைத்தளத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

கடந்த 2013ம் ஆண்டே இந்த கேஷ்புக் செயலியை உருவாக்கியிருந்தார். தற்போது காஷ்மீரில் சமூகவலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கேஷ்புக் இப்போது அங்கு வரவேற்பை பெற்றுள்ளது.

ஷாஃபீக், உசைர் ஜெயின் என்ற தனது நண்பருடன் இணைந்து இந்த கேஷ்புக் சமூக வலைத்தளத்தை மே 2ம் தேதி மீண்டும் வெளியிட முடிவு செய்தார்.

இந்த கேஷ்புக் தளத்தில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இணைந்துள்ளனர். இந்த செயலியை தற்சமயம் பயன்படுத்தி வருபவர்கள், இந்த தளம் சிறப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.