2006 ஆம் ஆண்டு சிம்பு நடித்த வல்லவன் படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமானார் மஹத். அதற்கு பிறகு 2007 ஆம் ஆண்டு காளை திரைப் படத்தில் சிறிய வேடத்தில் நடித்து இருந்தார்.

அதனைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜீத் நடித்த மங்காத்தா படத்தின் மூலம் தான் மகத் மக்கள் மத்தியில் அறியப்பட்டார்.

தன்னுடைய நீண்ட நாள் காதலியும் நடிகையுமான பிராச்சியை கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். கொரோனா ஊரடங்கின் போது பிராச்சிக்கு வளைப்பூட்டல் நிகழ்ச்சி நடந்தது.

இந்நிலையில் நடிகர் மஹத் மற்றும் பிராச்சி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், மகன் பிறந்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். அனைவருடைய வாழ்த்துக்களும் பிராத்தனைக்கும் நன்றி. அப்பாவானதில் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.