தமிழகத்தை போன்று அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசுப் பெட்டகம் வழங்கும் திட்டத்தை மகாராஷ்டிரா அரசு தொடங்கியுள்ளது. சுமார் 2,000 ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இந்த பரிசு பெட்டகத்தில் உள்ளன.

infant

மகாராஷ்ட்ரா மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் பங்கஜா முண்டே, அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசுப்பெட்டகம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அமைச்சர், “ பிறந்த குழந்தைகளின் இறப்பு விகித்ததை குறைக்கும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனையில் பிறகும் குழந்தைகளுக்கு பரிசுப் பெட்டகம் வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளோம்.

இந்த திட்டம் முதல் குழந்தைக்கு மட்டுமே பொருந்தும். இதன் மூலம் 4லட்சம் பெண்கள் பயனடைவர். குழந்தைக்கு வழங்கும் பரிசு பெட்டகத்தில் போர்வை, மெத்தை, டவல், குழந்தைக்கான ஆயில், ஷாம்பூ, விளையாட்டுப் பொருட்கள், நக வெட்டி, கையுறைகள், காலுறைகள் உள்ளிட்டவர்கள் அடங்கும். இந்த பெட்டத்தில் மதிப்பு சுமார் 2,000 ரூபாய் மதிப்புடையது. இதற்காக மாநில அரசு சார்பில் ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது “ என்று கூறினார்.