மும்பை

மும்பையில் உள்ள சர்வதேச பொருளாதார சேவை மையத்தைக் குஜராத் மாநிலம் காந்தி நகருக்கு மாற்றும் மத்திய அரசின் உத்தரவுக்கு மகாராஷ்டிர அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் வர்த்தக தலைநகர் மும்பை என அனைவரும் அறிவார்கள்.  பல பெரிய மற்றும் முக்கிய வர்த்தக மற்றும் நிதி  நிறுவனங்கள் தங்கள் தலைமையகங்களை மும்பையில் இயக்கி வருகின்றன.  தற்போது சர்வ தேச பொருளாதார சேவை மையம் தலைமையகத்தை மும்பையில் இருந்து குஜராத் மாநில தலைநகர் காந்திநகருக்கு மாற்ற உள்ளதாக மத்திய அரசு கடந்த 27 ஆம் தேதிய அரசாணையில் அறிவித்தது.

இந்த அறிவிப்பு மகாராஷ்டிர மாநிலத்தை ஆளும் மகா விகாஸ் அகாதி கூட்டணிக்கு மிகவும் அதிருப்தியை அளித்துள்ளது.   மகாராஷ்டிர அரசு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வ்ருகிரது.  சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவையில் இது குறித்துப் பேசிய போது இந்த திட்டம் யாருக்கும் நன்மை அளிக்காது எனத் தெரிவித்து இருந்தார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், “மத்திய அரசின் இந்த முடிவு மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது.  இது மும்பை நகர மக்களுக்கு எதிரான நடவடிக்கை ஆகும்.  மும்பை நகரம் இந்தியாவின் வர்த்தக தலைநகராக விளங்கும் போது சர்வதேச பொருளாதார சேவை மையம் மும்பையில் இருந்து சிவசேனாவுக்கு மாற்றுவது மிகவும் தவறான நட்வடிகை” எனத் தெரிவித்துள்ளார்.

ஆளும் கூட்டணியின் மற்றொரு கட்சியான காங்கிரஸ் கட்சித் தலைவரும் மாநில வருவாய்த்துறை அமைச்சருமான பாலாசாகேப் துரோட், “மும்பையின் பெருமையைக் குலைக்கும்  மத்திய அரசின் இந்த நடவடிக்கை மிகவும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது.   மும்பை நகரம் வர்த்தகம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளின் தலைநகர் என்பதை மனதில் கொண்டு மத்திய அரசு தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி, “மும்பை நகரில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து வந்த சர்வதேச பொருளாதார சேவை மையம் இங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதால் பலர் பணி இழக்க நேரிடும்” எனக் கவலை தெரிவித்துள்ளார்.