சதாரா,
மகாராஷ்டிரா மாநிலம் சதாரா பகுதியில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அளவானது ரிக்டர் அளவுகோளில் 3.4-ஆக பதிவாகியுள்ளது.
இன்று காலை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும், இந்த மிதமான நில நடுக்கம் காரணமாக வீடுகள், அடுக்கு மாடி கட்டிங்கள் லேசாக ஆடியதாகவும், வீட்டினுள் இருந்த பொருட்கள் கீழே விழுந்து சிதறியதால், பொதுமக்கள் அச்சமடைந்தாகவும், உடனடியாக வீதிக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேதம் குறித்து எந்தவித விவரம் வெளியாகவில்லை.