மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை சந்திக்க இருப்பதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறிய நிலையில், மத்தாவை உத்தவ் தாக்கரே சந்திக்க மாட்டார் என சிவசேனா தெரிவித்து உள்ளது.
மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் விஷயத்தில் மம்தா பானர்ஜி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பாராளுமன்றத்தின் குளிர் கால கூட்டத்தொடர் நடைபெறும் சூழ்நிலையில் மத்தா டெல்லியில் முகாமிட்டு பல தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். இது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதே வேளையில், மம்தா பானர்ஜி காங்கிரஸ் கட்சி தலைவரான சோனியாவை சந்திக்க மறுத்து வருகிறார். ஆனால், காங்கிரஸ் கட்சியனரை தனது கட்சிக்கு இழுத்து வருகிறார். ல் பீகார், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த காங்கிர1 முன்னாள் எம்.பி.க்கள் திரிணாமூல் காங்கிரஸில் இணைந்தனர். இதையடுத்து, திடீரென பாஜக எம்.பி. சுப்பிரமணியசாமியை சந்தித்து பேசி, பாஜக தலைமைக்கு அதிர்ச்சி அளித்தார்.
பின்னர், மாநிலம் சம்பந்தமான பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தேன். பி.எஸ்.எஃப்-இன் அதிகார வரம்பு நீட்டிப்பு விவகாரம் குறித்தும் பேசினார். அப்போது, உ.பி.யில் பாஜகவை தோற்கடிக்க அகிலேஷ் எங்கள் உதவியை விரும்பினால், நாங்கள் உதவி செய்வோம் என்று கூறியவர், நாங்கள் கோவா மற்றும் ஹரியானாவில் பாஜகவுடன் போரிட தொடங்கிவிட்டோம் என்று சூளுரைத்தார்.
இதையடுத்து மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை சந்தித்து பேச உள்ளதாகவும் தெரிவித்தார். இதற்கு முதல்வர் உத்தவ் தாக்கரேவின் கட்சியான சிவசேனா பதில் தெரிவித்து உள்ளது. உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்க மாட்டார் என்று தெரிவித்து உள்ளது.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா ஆட்சி செய்து வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்க மறுத்த மம்தாவை, உத்தவ் தாக்கரே சந்திக்க மறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.