மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை அதானி முழுமை தலைவர் கெளதம் அதானி இன்று சந்தித்தார்.
தேவேந்திர பட்னாவிஸ் கடந்த வாரம் முதல்வராக பதவியேற்ற நிலையில் அதானி உடனான இந்த சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதானி உடனான சந்திப்பு குறித்து முதலமைச்சர் அலுவலகம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சிக்கு அதானி வரமுடியாமல் போனதால் முதலமைச்சரை தற்போது நேரில் சந்தித்து வாழ்த்து கூற வந்ததாகக் கூறப்படுகிறது.