டில்லி
சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு மகாராஷ்டிரா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆதரவு எழுந்துள்ளது.
கடந்த 2010 ஆம் வருடம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது சமுதாய மற்றும் பொருளாதார நிலையின் அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது. தற்போது மீண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. ஏற்கனவே கடந்த 2011 ஆம் ஆண்டு சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது.
தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பு சாதிவாரியாக எடுக்கப்பட வேண்டும் எனப் பல மாநிலங்களில் கோரிக்கை எழுந்துள்ளது. ஏற்கனவே சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஒரிசா மற்றும் பீகார் மாநிலங்களில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு மறுத்து தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையில் இதே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. ஆகவே மத்திய அரசு இதை ஏற்காவிட்டால் மாநிலமே சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என மகா விகாஸ் அகாதி கூட்டணியின் அமைச்சர்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவைச் சந்தித்துப் பேச உள்ளதாக அம்மாநில துணை முதல்வர் அஜித்பவார் கூறி உள்ளார்.
இதே கோரிக்கையை உத்தரப் பிரதேச மாநில எதிர்க்கட்சியினரும் எழுப்பி வருகின்றனர். சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவு அளித்துள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இது குறித்து மாநில அரசு உடனடியாக தீர்மானம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.