மகாராஷ்டிரா மாநிலம் வனப்பகுதியே அருகே உள்ள குடிசை வீட்டுக்குள் புகுந்த சிறுத்தைப்புலி, அங்கு குட்டிகளை ஈன்றுள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பான வீடியோ மகாராஷ்டிரா மாநில வனத்துறை வெளியிட்டு உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் இகத்புரி பகுதியில் வனப்பகுதி அருகே உள்ள ஒரு ஆளில்லா குடிசைக்குள் ஒரு சிறுத்தை நான்கு குட்டிகளைப் பெற்றெடுத்துள்ளது. தற்போது “அனைத்து குட்டிகளும் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளன” என்று வன அதிகாரி கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.