நாக்பூர்:
மகாராஷ்டிரா மாநிலத்தில் தியோலி கிராமத்தில் உள்ள குளத்தில் மூழ்கி 6 பேர் உயிழ்ந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில உள்ள நாக்பூர் மாவட்டத்தில் ஹிங்கானா ஹெக்சில் அருகே உள்ளது சவாங்கி தியோலி என்ற கிராமம் உள்ளது.

இன்று வினாயகர் சதுர்த்தி விழா இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. வட மாநிலங்களில் வெகு சிறப்பாக நடைபெறும் இந்த விழாவுக்காக விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்யப்படுவது வழக்கம்.
விநாயகர் சதுரத்தியை முன்னிட்டு, வட மாநிலங்களில், அதற்கு ஒரு நாள் முன்னதாக ஹர்தாலிகா என்ற பூஜை நடைபெறுவது வழக்கம். அதேபோல், தியோலி கிராமத்தில் வினாயகர் சதுர்த்தி விழாவிற்கு முன் ஹர்தாலிகா பூஜை செய்வதுரு வழக்கம். இந்த பூஜை செய்வதற்காக கிராமத்தை சேர்ந்த பெண்கள் அருகே உள்ள குளத்திற்கு சென்றனர்.
வட மாநிலங்களில் பெய்துவந்த கனமழையால் அங்குள்ள குளங்கள், ஏரிகள் அனைத்தும் நீர் நிரம்பி உள்ளது. எதிர்பாராத விதமாக குளக்கரையில் பூஜை செய்த ஒரு பெண் கால் தடுமாறி குளத்தில் விழுந்துள்ளனர். அவருக்கு நீச்சல் தெரியாததால் அவரை காப்பாற்ற அவருடன் இருந்த மற்ற பெண்கள் ஒவொவருவராக அவரை காப்பாற்ற முயற்சி செய்து குளத்தில் இறங்கினர். இதில் அனைவரும் குளத்தில் மூழ்கி இறந்தனர்.
இதில் ஒருவர் மட்டுமே 45வயதானவர். மற்ற 5 பேரும் திருமணமாகாத இளம்பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்த தகவல் அறிந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் நீரில் மூழ்கி இறந்தவர்களுடைய உடல்களை போலீசார் குளத்தில் இருந்து வெளியே எடுத்து உடல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இளம் பெண்கள் உள்பட 6 பேர் குளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Patrikai.com official YouTube Channel