2011-ம் ஆண்டு வெளியான ‘மெளனகுரு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சாந்தகுமார் 8 வருடங்களுக்குப் பிறகு தன்னுடைய இரண்டாவது படத்தை இயக்கியுள்ளார்.

‘மகாமுனி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார். இந்துஜா மற்றும் மஹிமா நம்பியார் இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.

ஸ்டுடியோ க்ரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்க டட்லி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, எஸ்.தமன் இசையமைத்துள்ளார். சாபு ஜோசப் எடிட்டராகப் பணிபுரிகிறார்.

இப்படம் வருகின்ற செப்டம்பர் 6ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இந்த படதிற்கு தணிக்கை குழுவினர் “யு/ஏ” சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

[youtube-feed feed=1]