மகாகும்பமேளாவில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை.

அதேவேளையில், உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் ப்ரயாக்ராஜ் மருத்துவமனை பிணவறையில் 40 உடல்கள் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினரை மேற்கோள்காட்டி ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த அசம்பாவிதம் நடைபெற்று சுமார் 12 மணி நேரத்துக்கும் மேலாக ஆன நிலையில் இதுகுறித்த முழுமையான தகவலை உ.பி. மாநில அரசோ அல்லது மத்திய அரசோ இது வரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

15 முதல் 30 பேர் வரை பலியானதாகவும் 200க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் உள்ளதாகவும் பல்வேறு செய்திகள் காலை முதல் வெளியானது இந்த நிலையில் ராய்டர்ஸ் நிறுவனம் 40 பேரின் சடலங்கள் இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.