சென்னை:
நாடு முழுவதும் மகா சிவராத்திரி கொண்டாட்டம் நடைபெற்றது.
மகா சிவராத்திரியை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்ற நிலையில், கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கர்நாடகாவில் உள்ள தர்காவில் மகாசிவராத்திரி விழா கொண்டாட உள்ளதால் அசம்பாவிதங்களை தடுக்க 5 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கலபுருவி மாவட்டத்தில் உள்ள சூஃபி துறவியான லேடில் மஷாக் தர்காவில் ராமதாசர் மற்றும் ராகவ சைதன்யா சமாதியும், சிவலிங்கமும் உள்ளது. இதனால் தர்காவுக்குள் இந்து பக்தர்கள் பூஜை செய்து வந்ததால், இரு சமூகத்தினரிடையே வன்முறை வெடித்தது.
அது தொடர்பான வழக்கில், தர்காவில் உள்ள சமாதிக்குள் இந்துக்கள் சென்று வழிப்படலாம் என்றும், பண்டிகைக் காலங்களில் அவர்களின் பாரம்பரிய முறைப்படி பூஜைகளை செய்யலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மகாசிவராத்திரியை ஒட்டி தர்காவில் பூஜைகள் நடைபெறும் என்பதால் ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மகாசிவராத்திரி, வடமாநிலங்களில் உள்ள கோயில்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தஞ்சை பிரகதீஷ்வரர் கோயிலில் களை கட்டிய மஹா சிவராத்திரி திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.