பிரயாக்ராஜ்: மகா கும்பமேளாவில் பெண்கள் குளிக்கும் வீடியோகள் எடுத்து, அதை விற்பனை செய்வதாக சிலர் அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில், இதுகுறித்து, நடவடிக்கை எடுக்க, இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா உதவியை நாடி உள்ளது.
உலக நாடுகளே பிரமிக்கும் வகையில், மகா கும்பமேளா நிகழ்வுகள் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த ஜனவரி மாதம் 13-ந்தேதி தொடங்கியது. 45 நாட்கள் நடைபெறும் இந்த விழாவானது வரும் 26-ந்தேதி மகா சிவராத்திரியை ஒட்டி நிறைவு பெறுகிறது. 45 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் இதுவரை 56 லட்சம் பேர் புனிதநீராடி உள்ளனர். இந்த விழா முடிவடைய இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், இன்னும் சில கோடி பேர் புனித நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விழா குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், சமீபத்தில் சமூக வலைதளங்களில், அங்கு குளிக்கும் பெண்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியிட்டு, விற்பனைக்கு உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகின. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் இந்த மாபெரும் விழாவில் பங்கேற்று வருகின்றனர். மகா கும்பமேளாவில் பெண்கள் குளித்து உடை மாற்றும் புகைப்படங்களளை மறைந்து நின்று எடுத்துக்கொண்டு, அந்த வீடியோக்கள் ஆன்லைனில் விற்கப்படும் அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சமூக வலைதளங்களினான இன்ஸ்டாகிராம், டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்களில் இயங்கும் கும்பல்கள், இந்த வீடியோக்களை விற்பனை செய்து வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன. . இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மகா கும்பமேளாவில் பெண்களின் கௌரவத்தைப் பாதுகாக்க பாஜக அரசு தவறிவிட்டது. இது மிகவும் அநாகரீகமான மற்றும் உணர்ச்சிகரமான சர்ச்சைக்குரிய விஷயம் என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கடுமையாக விமர்சித்து இருந்தார். வீடியோக்கள் விவகாரம் தொடர்பாக பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மகா கும்பமேளாவில் பெண்கள் குளித்து உடை மாற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு விற்பனை செய்தததாக இரண்டு சமூக ஊடகங்கள் மீது உ.பி. காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. பெண்களின் இதுபோன்ற வீடியோக்களை விற்பனைக்கு வழங்கிய ஒரு டெலிகிராம் சேனலும் இந்த சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டது. பிப்ரவரி 19 அன்று அந்த சேனலுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன, மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வீடியோக்களை வெளியிட்டதாக கூறப்படும் இன்ஸ்டாகிராம் கணக்கு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஸ்டாகிராமை கையாளும் நபர் குறித்து மெட்டாவிடம் தகவல் கோரியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.