திருவண்ணாமலை: டிசம்பர் 13-ந் தேதி மகா தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், கார்த்திகை தீபத் திருவிழாவுக்காக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று காலை பந்தக்கால் நடப்பட்டது.
திருவண்ணாமலையில் சிவபெருமானின் அக்னி ஸ்தலமாமாகும். இங்குவீற்றிருக்கம் ஸ்ரீ அண்ணாமலையாருக்கு கார்த்திகை மாதத்தில் நடத்தப்படும் தீபத்திருவிழா பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் பழமையானதும், தொன்மை யானதுமான தீபத் திருவிழாவாகும். கார்த்திகை தீபத் திருவிழா என்பது தமிழ்நாட்டில் உள்ள முருகன் சிவன் என அனைத்து கோவல்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்ட வருகிறது. இந்த விழாவுக்கு மிகவும் பிரசித்தி பெற்றது அண்ணாமலையார் கோவில், அங்கு கார்த்திகை மாத தீபத்தன்று,. மலையில் மகா தீபம் ஏற்றப்படும்.
அதாவது, ‘ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்’ என்ற தத்துவத்தை நினைவுகூரும் வகையில் இத்திருவிழா சிறப்பாக கொண்டாடப் படுகிறது. இந்த விழாக்காலத்தில் சிவபெருமான் தனது அனைத்து ஆசீர்வாதங்களையும் பக்தர்களுக்க வாரி வழங்குவார் என்பது நம்பிக்கை. இதையொட்டி பல லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிவார்கள்.
இந்த நிலையில், நடப்பாண்டுக்கான கார்த்திகை தீபவிழாவுக்காக, இன்று காலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் இன்று காலை பந்தக்கால் நடப்பட்டது. பந்தக் காலுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன.
முன்னதாக, அருணாசலேஸ்வரர் கோவில் சன்னதியில் உள்ள சம்பந்த விநாயகர் மற்றும் பந்தக் காலுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து கோவிலில் இருந்து பந்தக்கால் எடுத்து வரப்பட்டு ராஜகோபுரம் முன்பு நடப்பட்டது. இந்த விழாவில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் பிரபாகர், மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், அண்ணாமலையார் கோவில் இணை ஆணையர் சி.ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா வருகிற டிசம்பர் மாதம் 1-ந் தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்குகிறது.
4-ந்தேதி அதிகாலை அருணாசலேஸ்வரர் சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம் நடக்கிறது.
அன்று முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு காலை மற்றும் இரவில் பஞ்ச மூர்த்திகள் மாடவீதி உலா நடைபெறும்.
13-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபமும் மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
இந்த ஆண்டு கார்த்திகை தீப திருவிழாவில் 30 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் திருவண்ணாமலை மாநகராட்சி செய்து வருகிறது.