லக்னோ,

மேகி நூடுல்ஸ் சர்ச்சை குறித்த ஆய்வ பரிசோதனையில், அதில், அளவுக்கு அதிகமாக சாம்பல் இருப்பது தெரிய வந்ததால், அந்த நிறுவனத்துக்கு ரூ.45 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற  ஆய்வகப் பரிசோதனையில் மேகி நூடுல்ஸ் தோல்வி யுற்றதால் நெஸ்ட்லே நிறுவனத்திற்கு 45 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு மேகி நூடுல்ஸ்-க்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டது.  பின்னர் நடைபெற்ற ஆய்வக சோதன மற்றும் வழக்குகளின் அடிப்படையில், தடை விலக்கப்பட்டது.

இந்நிலையில், உ.பியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம்   மேகி நூடுல்ஸ் மாதிரிகளை சேகரித்து ஷாஜஹான்பூர் (Shahjahanpur) மாவட்ட நிர்வாகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் ஆய்வகப் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

இந்த சோதனையில், விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளே மீறி, அதிகளவு சாம்பல் போன்ற பொருட்கள் இருப்பதாக ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து,  மேகி தயாரிக்கும் நெஸ்ட்லே நிறுவனத்துக்கு  45 லட்சம் ரூபாய் அபராதமும், மூன்று விநியோகஸ்தர்களுக்கு 15 லட்சம் ரூபாயும், 2 விற்பனையாளர்களுக்கு 11 லட்சம் ரூபாயும் அபராதம் விதித்துள்ளது.

ஆனால்,  இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள நெஸ்ட்டே, ஆய்வுக்கு பயன்படுத்திய மேகி 2015ம் ஆண்டுக்கு முன்பு உள்ளது என்றும், ஆய்வக முடிவு குறித்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் கூறி உள்ளது.