
“பத்திரிகைகள் என்னைக்கண்டு பயப்படக்கூடாது” என்று தெரிவித்து தேர்தல் படுதோல்விக்குப் பிறகும் தான் மாறவில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்.
திருமணவிழா ஒன்றுக்காக சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு வந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அந்த விழாவில் பேசினார். அப்போது, “தே.மு.தி.கவுக்கு தற்போது தோல்வி ஏற்பட்டிருப்பதாக பேசுகிறார்கள். அது குறித்து நான் கவலைப்படவலிலை. ஏனென்றால், சாம்பலில் இருந்து உயிர்தெழும் பீனிக்ஸ் பறவை போல தேமுதிக உயிர்தெழுந்து வரும்” என்று பேசினார்.

மேலும் அவர், “பத்திரி்க்கைகளை பார்த்து நான் பயப்படுகிறேன் என்று சிலர் சொல்கிறார்கள். இந்த விஜயகாந்த் யாரைக்கண்டும் பயப்படமாட்டான் அதுபோல் பத்திரிக்கைகளும் என்னைக்கண்டு பயப்படாமல் இருக்க வேண்டும்: என்று விஜயகாந்த் பேசினார்.
Patrikai.com official YouTube Channel