சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, அரசு பொங்கல் பரிசு தொகுப்புடன் பணம் வழங்காததால் அதிருப்தியில் இருந்த பெண்களுக்கு, அவர்களுக்கான மகளிர் உரிமைத் தொகையை முன்கூட்டியே அரசு வழங்கியுள்ளது பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பொதுவாக மகளிர் உரிமை தொகை ஒவ்வொரு மாதமும் 15ந்தேதி வாக்கில், அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு வந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, முன்னிட்டு மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இன்றுமுதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, வழக்கமாக பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கப்படும் ரூ.1000 வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டதால், அதிப்தியில் இருந்த பெண்களுக்கு, வரப்பிரசாதமாக, மகளிர் உரிமைத்தொகை முன்கூட்டியே அவர்களது வங்கக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது.
மக்கள் பெரிதும் எதிர்பார்த்த ஆயிரம் ரூபாய் பணம் தொடர்பாக எந்தவித அறிவிப்பும் இதுவரை வெளியாகாத நிலையில், இன்று அவர்களது வங்கிக்கணக்கில், ரூ.1000 வந்துள்ளது பெண்களிடையே ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் மகளிர் உதவி தொகையானது குடும்பத்தலைவிகளுக்கு மாதம், மாதம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் 1 கோடியே 14 லட்சத்து 65 ஆயிரத்து 525 பேருக்கு இன்று பொங்கல் பரிசாக மகளிர் உரிமைத் தொகை அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளயது.
இன்று காலை மகளிர் உதவி தொகை பெறும்க குடும்பத்தலைவிகளின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு ஆயிரம் ரூபாய் வழங்காத நிலையில் முன்கூட்டியே மகளிர் உரிமை தொகையாக ஆயிரம் ரூபாய் வந்தது குடும்பத்தலைவிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.