சென்னை:  கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விரிவாக்க திட்டம் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில்,  விடுபட்ட மகளிருக்கு ரூ.1000 நேற்றே வரவு வைக்கப்பட்டது. இது பெண்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 மாதந்தோறும் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் மகளிர் உரிமை தொகை திட்டம்  டந்த 2023 செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு, வெற்றிகரமாக செய்லபட்டு வருகிறது.  முதற்கட்டமாக இந்த திட்டத்தில் சுமார் 1,13,75,492 மகளிர் தற்போது வரை பயனடைந்து வருகின்றனர். தகுதியுடைய மகளிர்க்கு மாதந்தோறும் 15-ம் தேதியன்று அவரவர் வங்கி கணக்குகளில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் தொடர்ந்து கூடுதல் மகளிர் பயனடையும் வகையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. மேலும் அண்மையில் அனைத்து பகுதிகளிலும் தொடங்கப்பட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமிலும் இதற்கான விண்ணப்பப்படிவம் வழங்கப்பட்டது. இப்படியாக விடுபட்ட மகளிரும் பயனடைய வேண்டும் என்று அரசு பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்த நிலையில்,  அவர்கள் பயனடையும் வகையில், நேற்று (டிசம்பர் 12ந்தேதி)   சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

இந்த நிலையில்,   விடுபட்ட மகளிருக்கு அவரவர் வங்கி கணக்குகளில் ரூ.1000 செலுத்தும் பணி  நேற்று பிற்பகல் முதலே தொடங்கியுள்து.  இது  பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

[youtube-feed feed=1]