
பிரதமர் நரேந்திர மோடி, சஞ்சய் தத், சாவித்திரி, அம்பானி, சில்க் ஸ்மிதா, என்.டி.ஆர், பெரியார் உள்ளிட்ட பல நபர்களின் வாழ்க்கையை பையோபிக்காக உருவாகியுள்ளது.
இந்த வரிசையில் பாலிவுட் நடிகையாக மாதுரி தீட்சித்தின் வாழ்க்கையைப் படமாக்க நினைத்தனர். ஆனால் அதற்கு அனுமதி தர மறுத்துவிட்டார் மாதுரி தீட்சித்.
“எனது வாழ்க்கை வரலாற்று படத்தை எடுக்க வேண்டாம். இன்னும் என் வாழ்க்கையில் நான் செய்ய நினைப்பது நிறைய இருக்கிறது” என்று அதற்கு பதிலளித்துள்ளார் மாதுரி தீட்சித்.
இந்த ஆண்டு இவரது நடிப்பில் ‘டோட்டல் தமால்’, ’15 ஆகஸ்ட்’, ‘கலங்க்’ ஆகிய படங்கள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel