மதுரை
நேற்று கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மண் அகல் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற திருநாட்களில் கார்த்திகை தீபமும் ஒன்றாகும். தமிழ்க் கடவுள் எனப் போற்றப்படும் முருகன் இந்த தினத்தில் அவதரித்ததாகக் கூறப்படுகிறது. இந்த தினத்தில் அனைத்து வீடு மற்றும் கோவில்களில் விளக்கேற்றி வழிபடுவது வழக்கமாகும்.
இந்த தீபத்திருநாள் அன்று அனைத்து இல்லங்கள் மற்றும் ஆலயங்களில் மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளை ஏற்றி வரிசையாக வைத்து அலங்கரிப்பது வழக்கமாகும். அவ்வகையில் தமிழகத்தில் உள்ள பல ஆலயங்களிலும் விளக்கு ஏற்றப்பட்டிருந்தது.
நேற்று சங்கத் தமிழ் வளர்த்த நகரமான மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் ஆலயத்திலும் மண் அகல்விளக்குகளை ஏற்றி பொற்றாமரை குளம் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. நமது வாசகர்களுக்காக இங்கு சில படங்களைப் பதிந்துள்ளோம்.