தஞ்சாவூர்,
குழந்தையின்மை சிகிச்சைக்கு வந்த பெண்ணை கர்ப்பமாக்கிய டாக்டருக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இந்த பரிதாபகரமான சம்பவம் தஞ்சாவூர் அருகே பட்டுக்கோட்டையில் நடைபெற்றுள்ளது.
திருமணம் ஆகி பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாத கமர்நிஷா என்ற பெண் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு மருத்துவரிடம் தனது கணவருடன் சிகிச்சைக்காக சென்றார்
டாக்டரிடம் தனக்கு பல ஆண்டுகளாக குழந்தை இல்லை. அதனால் குடும்பத்தினர் அனைவரும் என்னை வெறுக்கிறார்கள் என்று தனது சொந்த சோகக்கதையை கொட்டியுள்ளார்.
இதனால் உஷாரான டாக்டர், அந்த பெண்ணை சிகிசைக்காக அடிக்கடி தனது மருத்துவமனைக்கு வரவழைத்து உள்ளார்.
நாளடைவில் சிகிச்சை என்ற பெயரில் இருவரும் காதல் வயப்பட்டுள்ளனர். இதன் காரணமாக கமர்நிஷா டாக்டரின் காமவலையில் சிக்கினார். இருவரும் உல்லாசமாக இருந்தனர். இதன் காரணமாக கமர்நிஷா கருவுற்றார். 10 மாதம் கழித்து அழகான குழந்தையை பெற்றெடுத்தார்.
டாக்டரின் சிகிச்சையால்தான் குழந்தை பிறந்துள்ளது என குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்..
ஆனால் அவரது கணவருக்கு சந்தேகம் பிறந்தது. அதன் காரணமாக குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்று கூறி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.
இதனால் செய்வதறியாமல் திகைத்த, கமர்நிஷா, தன்னை கர்ப்பமாக்கிய டாக்டரிடமே சென்றார். அவரிடம் தன்னை திருமணம் செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார். ஆனால், டாக்டர் அவரை திருமணம் செய்ய மறுத்து வந்தார்.
தொடர்ந்து கமர்நிஷா கொடுத்த தொல்லைக்கு பயந்த டாக்டர், அவரை காரில் வைத்து தாலி கட்டியு சமாதானப்படுத்தி உள்ளார்.
தாலி கழுத்தில் ஏறியதும், சந்தோஷமடைந்தார் கமர்நிணா. ஆனால், டாக்டரோ அவரை சந்திக்கவோ, பேசவோ மறுத்து வந்தார்.
இதனால் கமர்நிஷா மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், தன்னை கர்ப்பமாக்கிய டாக்டருக்கும், எனக்கு பிறந்த குழந்தைக்கும் டி.என்.ஏ. சோதனை நடத்தி குழந்தையின் தந்தை யார் என அறிய வேண்டும் என கூறியிருந்தார்.
இதனை விசாரித்த நீதிமன்றம், டாக்டர் மற்றும் குழந்தைக்கு டி.என்.ஏ. சோதனை செய்து அந்த அறிக்கையை வரும் நவம்பர் 25-ஆம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.