மதுரை,

றுபடை முருகன் கோவில்களில் ஒன்றான பழனியில் கிரிவலப்பாதையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு கோயில் நிர்வாகத்திற்கு உத்தர விட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு மதுரை திருப்பரங்குன்றம் மலையின் கிரிவலப் பாதையில் ஆக்கிரமித்துள்ள  கடைகள், வணிக நிறுவனங்களை அகற்றி பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த உத்தரவிட்ட நிலையில், தற்போது பழனி கோவிலை சுற்றியும் பாதுகாப்பு கருதி காமிராக்களை பொருத்தி கண்காணிக்க மதுரை உயர்நிதி மன்ற கிளை உத்தரவிட்டு உள்ளது.

பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில்  ஒன்றான பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் பவுர்ணமி கிரிவல நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கிரிவலைப் பாதையை சுற்றி உள்ள வணிக நிறுவனங்கள் கிரிவலப்பாதையை ஆக்கிரமித்து உள்ளனர். இதன் காரணமாக கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு நெரிசல் ஏற்படுகிறது. இந்த சமயத்தை பயன்படுத்தி திருடர்களும் கொள்ளையடித்து வருகின்றனர்.

இதன் காரணமாக, கிரிவலப் பாதையை சுற்றி உள்ள ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வணிக நிறுவனங்களை அகற்றக் கோரியும் பக்தர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க கோரியும் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், பழனி கிரிவலப்பாதையில் சிசிடிவி  காமிராக்கள் பொருத்த வேண்டும், ஆக்கிரமிப்புகளை அகற்றி பக்தர்களுக்கு போதிய வசதி செய்து தர வேண்டும் என்றும் கோவில் நிர்வாகத்துக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.