மதுரை
மொபைலில் பேசியபடி காரை ஓட்டிய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட டிடிஎஃப் வாசன் காரை ஒப்படைக்க மதுரை நீதிமன்றம் மறுத்துள்ளது.
கடந்த மே மாதம் 15 ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு டிடிஎஃப் வாசன் தனது நண்பர்களுடன் பழகுநர் உரிமத்துடன் காரில் சென்றார். மதுரை வண்டியூர் புறவழிச்சாலையில் பயணம் மேற்கொண்ட போது மொபைல் பேசியபடி வாகனத்தை இயக்கி அதை வீடியோவாக பதிவு செய்து தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.
எனவே சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த மதுரை அண்ணா நகர் காவல்துறையினர் டிடிஎஃப் வாசனை கைது செய்து அவரது காரை பறிமுதல் செய்தனர். மதுரை நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன் ல் ஜாமீன் கோரி மனு அளித்த நிலையில் அவருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
டிடிஎஃப் வாசனின் தாயார் சுஜாதா காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட காரை தங்களிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இன்று இந்த மனு மதுரை மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சுப்புலெட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது.
நீதிபதி,
“குற்றம் சாட்டப்பட்டவர் ஏற்கனவே இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார். அதனால் வாகனத்தை அவரிடம் ஒப்படைத்தால் அதேபோன்ற குற்றத்தை செய்ய வாய்ப்பு இருக்கலாம் என நீதிமன்றம் கருதுவதால் காரை ஒப்படைக்க உத்தரவிட முடியாது
எனக்கூறி டிடிஎஃப் வாசனின் தாயார் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.