மதுரை: உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை திருவிழா நடைபெற உள்ளதால், மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பொதுதுமக்களும் தங்ககுதிரையில் வரும் கள்ளழகரை காண ஆவலோடு காத்திருக்கின்றனர்.
உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா, கொரோனோ பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுமக்கள் அனுமதியின்றி கோவில் வளாகத்திற்குள்ளேயே எளிமையாக நடைபெற்றது. ஆனால், தற்போது கொரோனா கட்டுக்குள் உள்ளதாலும், அனைத்து கட்டுப்பாடுகளும் வாபஸ் பெறப்பட்டுள்ளதாலும், இந்த ஆண்டு சித்திரை திருவிழா எப்போதும்போல கோலாகலமாக நடைபெறுகிறது.
நாளை சித்திரை திருவிழா கொடியேறுகிறது. இதையடுத்து, திருக்கல்யாணம், திக் விஜயம், முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு தேரோட்டம் போன்றை இந்த ஆண்டு வழக்கமாக நடைபெறும் வகையில் விமரிசையாக நடத்த திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே கோவில், புதுப்பித்தல் பணி, மாசி வீதிகளில் தேர் வரும் வருவதற்கான ஏற்பாடுகள் , கோவிலில் மின் அலங்காரம் உள்ளிட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில் நாளை (ஏப்ரல் 5ந்தேதி) சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
- ஏப்ரல் 05, 2022 – செவ்வாய்கிழமை – சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் – கற்பக விருக்ஷ,சிம்ம வாகனம்
- ஏப்ரல் 06, 2022 – புதன்கிழமை – பூத , அன்ன வாகனம்
- ஏப்ரல் 07, 2022- வியாழக்கிழமை – கைலாச பர்வதம், காமதேனு வாகனம்
- ஏப்ரல் 08, 2022 – வெள்ளிக்கிழமை – தங்க பல்லக்கு
- ஏப்ரல் 09, 2022 – சனிக்கிழமை – வேடர் பறி லீலை – தங்க குதிரை வாகனம்
- ஏப்ரல் 10, 2022– ஞாயிறுக்கிழமை – சைவ சமய ஸ்தாபித்த வரலாற்று லீலை – ரிஷப வாகனம்
- ஏப்ரல் 11, 2022– திங்கள்கிழமை- நந்தீகேஸ்வரர் , யாளி வாகனம்
- ஏப்ரல் 12, 2022– செவ்வாய்கிழமை – ஸ்ரீ மீனாட்சி பட்டாபிஷேகம் – வெள்ளி சிம்மாசன உலா
- ஏப்ரல் 13, 2022– புதன்கிழமை – ஸ்ரீ மீனாட்சி திக்விஜயம் – இந்திர விமான உலா
- ஏப்ரல் 14, 2022– வியாழக்கிழமை – ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் (Meenakshi Sundareshwarar Thirukalyanam 2022) யானை வாகனம் , புஷ்பபல்லக்கு
- ஏப்ரல் 15, 2022– வெள்ளிக்கிழமை – திரு தேர் – தேரோட்டம் (ரத உட்சவம்) – சப்தாவர்ண சப்பரம் – தீர்த்தம்; வெள்ளி விருச்சபை சேவை – அன்று இரவு தல்லாகுளத்தில் எதிர் சேவை
- ஏப்ரல் 16, 2022– சனிக்கிழமை – தங்கக்குதிரையில் வெண்பட்டுடுத்தி ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் காலை 5.50 முதல் 6.20 மணிக்குள் வைகையில் எழுந்தருள்கிறார். 1000 பொன்சம்பரத்துடன் – சைத்யோபசாரம் வண்டியூர் (இரவு)/ தீர்த்தவாரியுடன் நிறைவுபெறுகிறது.
ஏப்ரல் 17, 2022– ஞாயிறுக்கிழமை – திருமலிருந்தசோலை ஸ்ரீ கள்ளழகர் – வண்டியூர் தேனுர் மண்டபம் – சேஷ வாகனம் (காலை) – கருட வாகனம் , பிற்பகல் – மண்டூக மகரிஷி மோட்சம் தருதல், (இரவு) தசாவதார காட்சி இடம் : ராமராயர் மண்டபம்
ஏப்ரல் 18, 2022 – திங்கள்கிழமை- (காலை) மோகனாவதாரம் – (இரவு) கள்ளழகர் திருக்கோலம் புஷ்ப பல்லக்கு – மைசூர் மண்டபம்.
ஏப்ரல் 19, 2022– செவ்வாய்கிழமை – ஸ்ரீ கள்ளழகர் திருமலை எழுந்தருறல்..
12 நாட்கள் சிறப்பாக நடைபெறும் இவ்விழாவில் நாளை 10:35 மணிக்கு மேல் மிதுன லக்னத்தில் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்படுகிறது. வருகிற 12-ஆம் தேதி முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், 13ஆம் தேதி திக்விஜயம் ஆகியவை நடைபெறுகிறது. 14ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வைபவம் நடக்கிறது.
இதை தொடர்ந்து 15 ஆம் தேதி மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறும் நிலையில் 16ஆம் தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
சித்திரைத்திருவிழாவைக்காண பல லட்சம் பக்தர்கள் மதுரையில் திரள்வார்கள் என்பதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடு போடப்பட்டுள்ளது.