சென்னை

மீபத்தில் தொடங்கப்பட்ட மதுரை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 31-ந்தேதி பெங்களூரு கன்டோன்மென்ட்-மதுரை இடையே வந்தேபாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அந்த ரயில் நேற்று முன்தினம் முதல் முறையாக இயங்கி வரும் நிலையில் பெங்களூரு-மதுரை வந்தேபாரத் ரயில் சேவையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

”மதுரை-பெங்களூரு கன்டோன்மென்ட் வந்தேபாரத் ரயில் (வண்டி எண்: 20671) கே.ஆர்.புரம் ரயில் நிலையத்துக்கு மதியம் 12.50 மணிக்கு வந்து மதியம் 12.52 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக நாளை (வியாழக்கிழமை) முதல் மதியம் 12.30 மணிக்கு வந்து மதியம் 12.32 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

மறுமார்க்கமாக பெங்களூரு கன்டோன்மென்ட்-மதுரை வந்தேபாரத் ரயில் (20672) கே.ஆர்.புரம் ரெயில் நிலையத்துக்கு மதியம் 1.55 மணிக்கு வந்து மதியம் 1.57 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக வருகிற 15-ந்தேதி முதல் மதியம் 1.43 மணிக்கு வந்து 1.45 மணிக்கு புறப்பட்டு செல்லும்.”

என்று கூறப்பட்டுள்ளது.