சென்னை

ற்கனவே சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாத மதுரை ஆதினத்துக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை நோக்கி  கடந்த மே 2-ம் தேதி வந்த மதுரை ஆதீனம் ஞானசம்​பந்த தேசிக பரமாச்​சா​ரிய சுவாமிகளின் காரும், சேலத்​தில் இருந்து சென்னை நோக்கி வந்த காரும் உளுந்​தூர்​பேட்டை பகு​தி​யில் மோதி விபத்​துக்​குள்​ளானதில் 2 கார்​களும் லேசாக சேத மடைந்​தன.

விபத்துக்கு மறு​நாள் காட்​டாங்​கொளத்​தூரில் ஒரு நிகழ்ச்​சி​யில் பேசிய மதுரை ஆதீனம், மாற்று மதத்தை சேர்ந்த சிலர் தன்னை கார் ஏற்றி கொல்ல முயன்​ற​தாக குற்​றம்​சாட்​டி​னார். காவல் துறை இதற்கு மறுப்பு தெரி​வித்​தது.

இதையொட்டி உயர் நீதி​மன்ற வழக்​கறிஞர் ராஜேந்திரன் அளித்த புகாரின்​பேரில், இரு சமூகத்​தினர் இடையே பகைமையை ஏற்​படுத்​துதல் உட்பட 4 பிரிவு​களின் கீழ் மதுரை ஆதீனம் மீது சென்னை கிழக்கு மண்டல சைபர் க்ரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்​தனர்.

விபத்து குறித்து நேரில் ஆஜராகி விளக்​கம் அளிக்​கு​மாறு ஆதீனத்​துக்கு சைபர் க்ரைம் காவல்துறையினர் கடந்த 30-ம் தேதி சம்​மன் அனுப்பினர். ஆயினும் மதுரை ஆதினம் ஆஜராக​வில்​லை.

எனவே சென்னை சேத்​துப்​பட்டு காவல் நிலைய வளாகத்​தில் உள்ள சென்னை கிழக்கு மண்டல சைபர் க்ரைம் அலுவலகத்தில் வரும் 5-ம் தேதி ஆஜராகு​மாறு மதுரை ஆதீனத்​துக்கு மீண்டும் 2-வது முறை​யாக காவல்துறையினர்​ சம்​மன்​ அனுப்​பி உள்​ளனர்​.