மதுரை:
கோயில் குத்தகை பணம் கொடுக்காதவர்கள் அடுத்த பிறவியில் பெருச்சாளியாக பிறப்பார்கள் என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் கடைகளை குத்தகைக்கு எடுத்து வாடகை கொடுக்காதவர்கள் அல்லது கோயிலுக்கு உண்டான கடனை செலுத்தாதவர்கள் உடனடியாக கொடுத்துவிடுங்கள் அப்படி இல்லை என்றால் அடுத்த ஜென்மத்தில் வவ்வாலாகவோ , பெருச்சாளியாகவோ , மூஞ்சிறுவாகவோ பிறக்க நேரிடும் என்று கூறியுள்ளார்.
தற்போது பலருக்கு நல்ல எண்ணங்கள் இல்லை. அதனால் நல்ல சம்பளம், அழகு இருந்தாலும் பெண் கிடைப்பதில்லை. பெண் கிடைத்தாலும் நல்ல மாமியார் கிடைப்பதில்லை. நல்ல மாமியார் கிடைத்தாலும் மருமகள் சரியாக இருப்பதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இப்படி சரமாரியாக அவர் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[youtube-feed feed=1]