மதுரை:

மதுரையில் போலீஸ் என்கவுண்ட்டரில், 2 ரவுடிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

மதுரை கூடல்நகர் சிக்கந்தர்சாவடி பகுதியில் ஒரு வீட்டுக்குள் சில ரவுடிகள் பதுங்கி இருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு விரைந்து சென்று ரவுடிகளை சரமணடையுமாறு எச்சரித்தனர். ஆனால் ரவுடிகள் போலீசாரை தாக்க முயற்சி செய்தனர்.

இதனையடுத்து போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் ரவுடிகள் மந்திரி என்ற முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக் ஆகியோர் உயிரிழந்தனர். சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து எஸ்.பி. மணிவண்ணன் கூறுகையில்,‘‘ கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க செல்லூர் தனிப்படை போலீசார் வந்தனர். அப்போது ரவுடிகள் துப்பாக்கி வைத்து வைத்து தாக்க முயற்சித்தனர். இதனால் ஒரு போலீசாரின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதர விபரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்’’ என்றார்.

[youtube-feed feed=1]