சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் 166வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற உள்ளது. கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் நடெபற உள்ள இந்த பட்டமளிப்பு விழாவில்  உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொள்வாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

சென்னை பல்கலைக்கழ்கத்துக்கு துணைவேந்தர் இன்னும் நியமிக்கப்படாததால்,   தற்போது ஒருங்கிணைப்புக் குழு பல்கலைக்கழக நிர்வாகத்தை கவனிக்கிறது.  கடந்த ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக குடியரசு தலைவர்  முர்மு கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார்.

ஆனால், இந்த ஆண்டு, பட்டமளிபுபு விழாவை புறக்கணிக்கப்போவதாக பேராசிரியர்கள் அறிவித்துள்ளனர்.   தங்கள்து 8 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிக்கப் போவதாக கூறியிருந்தனர். இதுதொடர்பாக  பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது.

இதைத்தொடர்ந்து, சென்னை பல்கலைக்கழகத்தின் 166வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் இந்த விழா இன்று நடைபெற உள்ள நிலையில், அமைச்சர் பொன்முடி பங்கேற்பாரா? என்ற ஆர்வம் ஏற்பட்டு வருகிறது.
இந்த பட்டமளிப்பு விழாவில் சுமார் 55 ஆயிரம் பேர் பட்டம் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  “சென்னை பல்கலைக்கழகத்தின் 166-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக ஆட்சிப்பேரவை அரங்கில் வருகிற 24-ம் தேதி நடைபெறுகிறது. ஆளுநர் ரவி: விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரான தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகிக்கிறார். அமைச்சர் பொன்முடி சிறப்புரை ஆற்றுகிறார்.

இந்திய அணுசக்தி கழகத்தின் முன்னாள் தலைவரும், மும்பை ஹோமிபாபா தேசிய நிறுவனத்தின் வேந்தருமான அனில் ககோட்கர் முதன்மை விருந்தினராக பங்கேற்று பட்டமளிப்பு விழா உரையாற்றுகிறார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே தமிழக அமைச்சர்கள் கவர்னர் பங்கேற்கும் விழாவினை புறக்கணித்து வரும் நிலையில், இன்றைய பட்டமளிப்பு விழாவையும் புறக்கணிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 167 ஆண்டு பழமையும், பாரம்பரியமும் மிக்க பல்கலைக்கழகத்தில், துணைவேந்தர் இல்லாமலேயே பட்டமளிப்பு விழா நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.