சென்னை:

போட்டி தேர்வுகளில் தவறான விடைக்கு சரியாக எழுதிய விடையின் மதிப்பெண்ணிலிருந்து கழிக்கும் முறைக்கு  சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது.


நெல்சன் என்ற மாணவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஐஐடி-யில் சேர்வதற்காக நுழைவுத் தேர்வு எழுதினேன். ஒரு கேள்வியில் தவறான பதிலுக்கு, சரியாக எழுதிய விடையின் மதிப்பெண்ணிலிருந்து குறைத்துவிட்டனர்.

இதனால் என்னால் தேர்ச்சி பெற முடியவில்லை. கனடா, ஜெர்மனி போன்ற நாடுகளில் கூட தவறான விடைகளுக்கு மதிப்பெண்களை குறைக்கும் முறை பின்பற்றப்படவில்லை .

எனவே, எனது விடைத் தாளை மறு மதிப்பீடு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நடத்திய நீதிபதி மகாதேவன், இந்த வழக்கில் முகாந்திரம் இருப்பதாகக் கூறி, போட்டி தேர்வுகளில் தவறான விடைகளுக்கு, சரியாக எழுதிய விடையின் மதிப்பெண்ணிலிருந்து  கழிக்க தடை விதித்தார்.