சென்னை: சிதம்பரம் கோயில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வதை தடுத்த தீட்சிதர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது – சென்னை உயர்நீதிமன்றம். விசாரணை நிலுவையில் உள்ளதால் வழக்கை ரத்து செய்யக் கூடாது என காவல்துறை கோரியதைத் தொடர்ந்து, வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

முன்னதாக, கனகசபை மீது ஏறி நின்று தரிசனம் செய்ய முயன்ற ஜெயசீலா என்ற பெண் பக்தரை, சாதி பெயரைச் சொல்லித் திட்டியதாக, தீட்சிதர்கள் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது. தீட்சிதர்கள் கவுரி சங்கர் உள்ளிட்ட எட்டுபேர் மீது தொடரப்பட்ட இந்த வழக்கின் விசாரணை கடலூர் அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் கடந்தா 2023 ஜூன் மாதம் ஆருத்ரா தரிசன நிகழ்வின் போது அரசு உத்தரவை மீறி கனகசபை மீது பக்தர்களை ஏறவிடாமல் தீட்சிதர்கள் தடுப்பதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதை எதிர்த்து தீட்சிதர்கள் சார்பில், தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது காவல்துறை தரப்பில் வழக்கை ரத்து செய்ய கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உயர்நீதிமன்றம் வழக்கை ரத்து செய்ய மறுத்துள்ளது.