சென்னை:
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் 50ஆவது தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்தவர் சஞ்ஜீப் பானர்ஜி. இவர் மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்ததையடுத்து, முனீஷ்வர்நாத் பண்டாரி சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டார்.
பிப். 10ஆம் தேதி அன்று உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரையை ஏற்ற குடியரசுத் தலைவர், முனீஷ்வர்நாத் பண்டாரியை தலைமை நீதிபதியாக நியமித்து உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில், தற்போதைய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரியின் பதவி காலம் இன்றுடன் முடிவடைகிறது.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள துரைசாமி நாளை பொறுபேற்க உள்ளார்.