சென்னை:
மிழகத்தில் தனியார் பள்ளிகள்  3தவணைகளாக   75% கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கப்படு வதாக தமிழக அரசு சென்னை  நீதிமன்றத்தில்  தெரிவித்திருந்தது. அதைத்தொடர்ந்து, தனியார் பள்ளிகள், கல்லூரிகள் ஆகஸ்டு மாதம் இறுதிக்குள் 40% சதவிகிதம் கல்விக்கட்டணத்தை வசூலிக்கம் சென்று சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கால் பொதுமக்கள் வாழ்வாதாரம் இழந்த நிலையில், தனியார் பள்ளிகள், கல்லூரிகள்  கல்விக் கட்டணத்தை உடனே செலுத்தும்படி  வலியுறுத்தி வருகிறது. இதற்கு தமிக அரசு தடை போட்ட நிலையில், அதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.
வழக்கின் கடந்த விசாரணையின்போது, தனியார் கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் கல்வி போதிப்பதாலும், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டியது உள்ளதாலும், கல்விக் கட்டணம் வசூலிக்க லாம் என்று நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்த வழக்கின் இன்றைய விசாரணையின்போது,  தமிழகஅரசு சார்பில்  “தனியாா் பள்ளிகளில் 75% கல்விக் கட்டணத்தை வசூலிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்படி,  தற்போது 25%, பள்ளிகள் திறந்த பிறகு 25%, பள்ளிகள் திறந்து 3 மாதங்களுக்கு பிறகு 25% என மூன்று தவணைகளாக வசூலிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.  மேலும், தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு முடிவெடுக்கும் என்றும் கூறியது.
இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம், தனியார் பள்ளிகள், கல்லூரிகள் ஆகஸ்ட் 31 க்கு முன்பு  40% கட்டணத்தை வசூலிக்க அனுமதித்து உத்தரவிட்டது.