சென்னை
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் மரணம் அடைந்தோர் உடல்களை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடக் கோரி நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. அதை ஒட்டி காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் மரணம் அடைந்தனர். இறந்தவர்களில் 7 பேர் உடல் ஏற்கனவே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு விட்டது. இன்னும் 6 பேர் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படாமல் உள்ளது.
இந்த பிரேத பரிசோதனையை எதிர்த்து சென்னை வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் “ஏற்கனவே பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 7 பேரின் உடல்களும் மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்பட வேண்டும். அதை அரசு மருத்துவர்கள் செய்ய வேண்டும்.
மேலும் இந்த பரிசோதனை எய்ம்ஸ் மருத்துவர் மற்றும் தடய வல்லுனர்கள் முன்னிலையில் நடத்த வேண்டும்.
குண்டடி காயங்களை புகைப்படம் எடுக்க வேண்டும். சடலங்களை அனைத்து கோணங்களிலும் எக்ஸ் ரே படம் எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.