மதுரை
தமிழக பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்த வேண்டும் என மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் மாணவர்கள் பயணிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத் தடுப்பது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது.
அந்த விசாரணையில்,
”கூடுதல் பேருந்துகள் இயக்கினாலும் இளைஞர்களின் படிக்கட்டு பயணமும் விபத்தும் குறையவில்லை .பல இடங்களில் ஓட்டுநர்களும் நடத்துநர்களும் இளைஞர்களால் தாக்கப்படும் நிகழ்வுகள் நடக்கிறது . அரசுப் பேருந்து ஓட்டுநர்களும் நடத்துநர்களும் எப்படிச் சமாளிப்பார்கள் .
அனைத்துப் பேருந்துகளிலும் படிக்கட்டுகளில் தானியங்கி கதவுகளைப் பொருத்த வேண்டும் தமிழகத்தில் எத்தனை பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன ? எத்தனை பேருந்துகளில் பொருத்தப்படாமல் உள்ளன?”
எனக் கேள்வி எழுப்பி உள்ளது.
இது குறித்து பதில் மனுத் தாக்கல் செய்ய,உள்துறைச் செயலர் , போக்குவரத்துத் துறைச் செயலர் ஆகியோருக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.