ஜபல்பூர்: ஆடு மாடுகள் உண்ணும் இலைதழைகளுக்கு பதில் இனிமேல் சாக்லெட் சாப்பிடும் வகையில், ம.பி.பல்கலைக்கழகம் அசத்தல் உணவை கண்டுபிடித்துள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
வனவிலங்குகளின் உணவு குறித்து ஆராய்ச்சி செய்த மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூரில் உள்ள நானாஜி தேஷ்முக் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம், ஆடுமாடுகள் ருசித்து உண்ணும் வகையில் சாக்லேட்டை கண்டுபிடித்து அசத்தி உள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நானாஜி தேஷ்முக் கால்நடை அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.பி.திவாரி, காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப, கால்நடைகளும் உணவு தேவைப்படுகிறது. கால்நடைகளுக்கு இலை தழைகள் போன்ற பசுந்தீவனம் கிடைக்காதபோது, மாற்றுத்தீவனம் வழங்கப்படுவது குறித்து ஆராய்ச்சி செய்ததில், இந்த சாக்கெட் தயாரிக்கப்பட்டு உள்ளது. “பல்வேறு வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த சாக்லேட் உருவாக்கப்பட்டு உள்ளது. அதாவது, கால்நடை தீவன தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிற கடுகு புண்ணாக்கு, அரிசி தவிடு, வெல்லப்பாகு, ஸ்டார்ச், சுண்ணாம்புத்தூள், உப்பு போன்ற பல பொருட்களையும் கொண்டு தயாரிக்கப்படுகிற .இதை கால்நடைகள் விரும்பி உண்ணும். இதை சோதனை முயற்சியில் உறுதி செய்துள்ளோம். இருந்தாலும் இந்த சாக்லெட்டை, மாநில கால்நடை பராமரிப்புத்துறையின் உதவியுடன் மாநிலம் முழுவதும் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
இந்த சாக்லேட்டை கால்நடைகள் அப்படியே சாப்பிடலாம். பிற தீவனங்களுடன் சேர்த்தும் சாக்லேட்டை கால்நடைகளுக்கு தரலாம். இந்த சாக்லேட்டை கால்நடைகள் சாப்பிடுகிறபோது, அவற்றின் பால் உற்பத்தி அதிகரிப்பது மட்டுமின்றி கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த சாக்லேட் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.