மத்தியப்பிரதேச எம் எல் ஏ க்கள் 22 மணி நேரம் பணி புரிந்து சாதனை

Must read

போபால்

த்தியப் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினர்கள் 22 மணி நேரம் பணி புரிந்து சாதனை நிகழ்த்தி உள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த 8 ஆம் தேதி தொடங்கியது.  இந்த தொடர் இம்மாதம் 26 ஆம் தேதி நிறைவு பெறுகிறது.   இடையில் ஜூலை 15 மற்றும் 16 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டது.  அதை ஈடுகட்ட கூட்டத்தொடர் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதையொட்டி கடந்த சனிக்கிழமை அன்று கூட்டத்தொடர் காலை 11 மணிக்கு தொடங்கியது.  அந்த தொடர் 12 மணி நேரம் நடைபெற்றது.   மாநில சட்டப்பேரவையின் சரித்திரத்தில் முதல் முறையாக ஞாயிற்றுக் கிழமையும் தொடர்ந்தது.

 

ஞாயிற்றுக்கிழமை அன்று சுமார் 12 மணி நேரம் கூட்டம் மீண்டும் தொடர்ந்தது.  இதில் கேள்வி நேரம், ஜீரோ அவர், என பல அரசுப் பணிகள் நடைபெற்றன.  இந்த தொடரில் 22 மணி நேரம் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பணி புரிந்து புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளனர்.

More articles

Latest article