டெல்லி: போராட்டங்கள், வன்முறையால் ஏற்படும் சேதங்களை, அதை நடத்தும் கட்சிகளிடம் இருந்து மீட்கும் வகையிலான புதிய மசோதா மத்திய பிரதேச சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
உ.பி. மாதிரியைப் பின்பற்றி, மத்தியப் பிரதேச மாநிலத்திலும், வன்முறைப் போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள் மற்றும் வகுப்புவாத கலவரங்களின் போது பொதுச் சொத்துக்களுக்கு ஏற்படும் சேதங்களை போராட்டக்காரர்கள் மற்றும் கலவரக்காரர்களிடமிருந்து மீட்டெடுக்க அரசாங்கம் ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்தும் என்று மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
அதன்படி இந்த மசோதா இன்று (டிசம்பர் 21) அல்லது நாளை சட்டமன்றத்தில் மசோதா அறிமுகப்படுத்தப்படும் என்று குறிப்பிட்டார். ஏற்கனவே பசு பாதுகாப்பு சட்டம்,மதமாற்ற எதிர்ப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது, அரசியல் மற்றும் சாதி மதங்கள் சார்பாக நடத்தும் ஆர்ப்பாட்டம், வன்முறைப் போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள் மற்றும் வகுப்புவாதக் கலவரங்களின்போது ஏற்படும் பொதுச்சொத்துக்களுக்கு சேததுக்கு, அந்த கட்சிகளிடம் இருந்தே இழப்பீடும் பெறும் வகையில், கலவரக்காரர்களிடமிருந்து பொதுச்சொத்துக்களை மீட்கும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.