போபால்:

த்தியப் பிரதேசத்தில்  ரயிலில் நடந்த குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு அம்மாநில அரசு நிவாரணத் தொகை அறிவித்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் சாஜாபூரில் போபாலிருந்து உஜ்ஜைன் வரை செல்லும் பாசஞ்சர் ரயிலில் இன்று காலை  பத்து மணி அளவில் குண்டு  ஒன்று வெடித்தது. இதில் பயணிகள் ஆறு பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக,  அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

குண்டு வெடிப்பு குறித்து விசாரணை நடந்துவருகிறது. இந்த நிலையில்  மத்திய பிரதேச அரசு சார்பில் காயமடைந்தவர்களுக்கு நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டிருக்கிறது. லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரண நிதி வழங்கப்படும் என்று மத்தியபிரதேச அரசு அறிவித்துள்ளது.