நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார்: மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்

Must read

போபால்:

ரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நேற்று நள்ளிரவில் கவர்னர் அழைப்பின் பேரில் மத்திய பிரதேச மாநில முதல்வர் கமல்நாத் அவரை சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பிரதேச மாநில முதல்வர் கமல்நாத் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

பரபரப்பானஅரசியல் சூழ்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடருக்காக மத்திய பிரதேச , சட்டசபை இன்று கூடுகிறது. இதில் கவர்னர் உரை முடிந்த பின்னர் சட்டசபையில் பலத்தை நிரூபிக்கும்படி கமல்நாத்திற்கு கவர்னர் லால்ஜி டாண்டன் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் கவர்னரின் அழைப்பின் பேரில் முதல்வர் கமல்நாத் அவரை நேரில் சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டசபை நடவடிக்கைகள் சுமூகமாக நடத்தவேண்டும் என தன்னிடம் கவர்னர் கறினார். இது தொடர்பாக திங்கட்கிழமை இன்று காலை சபாயாகருடன் பேசுவேன் என கூறியதாக அவர் கூறினார்.

மேலும் கவர்னரின் உத்தரவுப்படி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுமா என்ற கேள்விக்கு இன்று காலை சபாநாயகரை சந்தித்து பேச உள்ளதாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது குறித்து சபாநாயகர் முடிவு எடுப்பார் என கூறினார்

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article