போபால்
மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகான் 2 ஆம் முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் மத்தியப் பிரதேச மாநிலமும் ஒன்றாகும். இம்மாநிலத்தின் முதல்வர் சிவராஜ் சவுகான் ஆவார். இவருக்குக் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுக் குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில் அவருக்கு மீண்டும் கொரோனா அறிகுறிகள். தென்பட்டுள்ளன. அதையொட்டி அவர் பரிசோதனை செய்து கொண்டுள்ளார். அதில் அவருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதி ஆனது.
இதையொட்டி சிவராஜ் சவுகான் தனது டிவிட்டர் பக்கத்தில் தமக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆனதாகத் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் தம்மைத் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளதாகவும், தம்முடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.