விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் பங்கேற்றவர் மதுமிதா .
ஒரு டாஸ்க்கின் போது சக போட்டியாளர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டதில், தன்னை தானே துன்புறுத்திக்கொண்டார் மது. இதனை காரணமாகக் கூறி அவரை உடனடியாக வெளியே அனுப்பினார் பிக் பாஸ்.
இதைத்தொடர்ந்து மதுமிதா மீது, விஜய் டிவி நிர்வாகம் சார்பில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மதுமிதா தங்களை மிரட்டுவதாக சென்னை கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தன் மீதான புகாரை தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த மதுமிதா, தன் மீதான புகார் முற்றிலும் பொய்யானது என்று தெரிவித்தார்.
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தன்னை கொடுமைப் படுத்தியதாக நசரத்பேட்டை காவல்நிலையத்தில் நடிகை மதுமிதா அஞ்சல் வழியாக புகார் அளித்துள்ளார்.
மேலும் சக போட்டியாளர்கள் தன்னை கொடுமைப்படுத்தியதை நிகழ்ச்சி தொகுப்பாளரான கமல்ஹாசன் கண்டிக்கவில்லை என்றும் மதுமிதா அளித்த தனது புகாரில் தெரிவித்துள்ளார். தன்னை மனஉளைச்சலுக்கு ஆளாக்கி 56வது நாளில் வலுக்கட்டாயமாக போட்டியிலிருந்து வெளியேற்றியதாகவும் மதுமிதா தனது புகாரில் கூறியுள்ளார்.