
தமிழில் அலைப்பாயுதே, மின்னலே படங்களின் மூலம் ரசிகர்களை தன்வசப்படுத்திய மாதவன்.
தமிழில் கடைசியாக மாதவன் நடிப்பில் ஓடிடி தளத்தில் ‘மாறா’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
நடிகராக மட்டுமல்லாது ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் அவதாரமெடுத்துள்ளார் மாதவன். ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்ளிட்ட 3 மொழிகளில் உருவாகி வரும் இத்திரைப்படம் இஸ்ரோ விஞ்ஞானியாக பணியாற்றிய நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது.
திரைத்துறையில் பிஸியாக இருக்கும் நடிகர் மாதவனுக்கு அவரது கலைச்சேவையை பாராட்டி கோலாபூரில் உள்ள டி.ஒய் பாட்டில் பல்கழைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. இதுகுறித்து நடிகர் மாதவன் கூறுகையில், “இந்த மரியாதையால் நான் உண்மையிலேயே பணிவுடன் இருக்கிறேன். சவால் அளிக்கக் கூடிய புதிய படங்களைத் தொடர இது என்னை ஊக்கப்படுத்தும்.” என்று தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]