வாரணாசி:
ங்கையில் மூழ்கப் போவதாக கடிதம் எழுதி வைத்து விட்டுத் தலைமறைவான வேந்தர் மூவிஸ் அதிபர் மதன் உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது.
தமிழ்ச் திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான மதன். இரண்டு வாரங்களுக்கு முன்பு கங்கை நதியில் ஜல சமாதி அடையப்போவதாக கடிதம் எழுதிவைத்துவி்ட்டு தலமறைவானார்.
s-img-2016-06-08-1465386700-madhan-vendhar-movies-1-600
அவரைத் தேடி வாரணாசி சென்ற அவரது குடும்பத்தினர் படகுகளில் தேடினர். உ.பி. காவல்துறையிலும் புகார் அளித்தனர். அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் அவருக்கு நெருக்கமான ஐ.ஜே.கே.  கட்சித் தலைவர் பச்சமுத்து என்கிற பாரிவேந்தர், மதன் மோசடி செய்துவிட்டதாக புகார் கூறினார்.
இதை மறுத்த மதன் குடும்பத்தினர், நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு அளித்து மதனை ஆஜர் படுத்த கோரினர். பத்திரிகையாளர்களையும் சந்தித்தனர்.
இதற்கிடையில் மதன் கொலை செய்யப்பட்டதாகவும் தகவல் பரவியது. இந்த நிலையில் மதன்  உ.பி. மாநிலம் பபத்பூர் விமான நிலையத்திலிருந்து போலீஸ் பிடியில் சிக்காமல் தப்பியுள்ளது தெரியவந்துள்ளது.