கவிஞர் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு மீண்டும் இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது .

ஓஎன்வி குறுப்பு பெயரிலான விருது வைரமுத்துக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பின் சமூக வலைத்தளத்தில் உண்டான எதிர்ப்பினால் மறுபரிசீலனை செய்யப்படும் என அறிவித்தனர் . இதனிடையே அந்த விருதினை திருப்பி கொடுத்துவிடுவதாக வைரமுத்து தெரிவித்தார் .

சின்மயி வைரமுத்து மீது பல வருடங்களுக்கு முன் வைத்த பாலியல் குற்றச்சாட்டு மேலே சொல்லப்பட்ட காரணங்களால் மீண்டும் சர்ச்சையானது.

இதற்கு தற்போது வைரமுத்து மகன் மதன் கார்கி சின்மயி தனது தந்தையை சந்தித்து திருமண பத்திரிகை தர விரும்பியதாகவும், சின்மயி மீது அதிருப்தியில் இருந்த வைரமுத்து சின்மயியை சந்திக்க மறுத்ததாகவும், சின்மயி கேட்டுக் கொண்டதால் தனது தந்தையிடம் பேசி சின்மயியை சந்திக்க அவரை ஒத்துக் கொள்ள வைத்ததாகவும் கூறியுள்ளார்.

வைரமுத்து ஏன் சின்மயியை சந்திக்க மறுத்தார் என்பதற்கான காரணத்தையும் மதன் கார்க்கி கூறியுள்ளார். 2012 இல் சென்னை உயர்நீதிமன்றத்தின் 150 வது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்களில் வைரமுத்துவும் ஒருவர். விழாவில் கலந்து கொள்வதாக உறுதியளித்த சின்மயி கடைசி நேரத்தில், வேறு நிகழ்ச்சி இருப்பதாகக்கூறி வரவில்லை. இதன் காரணமாக சின்மயி மீது அதிருப்தியில் இருந்த வைரமுத்து, அவர் திருமண பத்திரிகை வைக்க விரும்பியபோது, சின்மயியை சந்திக்க மறுத்துள்ளார். இந்த விளக்கத்தை அளித்திருக்கும் மதன் கார்கி, 150-வது ஆண்டுவிழா அழைப்பிதழையும் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.