சுரேஷ் காமாட்சியின் ”மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் தொடங்கியுள்ளது. கொரோனா அச்சுறுத்தலிலிருந்து படக்குழுவினரைப் பாதுகாக்க சித்த மருத்துவர் வீரபாபு பணிபுரிந்து வருகிறார்.
கொரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்கியுள்ளதால், அனைவருமே கொரோனா பரிசோதனை செய்துகொண்டு கலந்து கொண்டுள்ளனர்.
படக்குழுவினருக்கு தினசரி காலை, மாலை என இரு வேளைகளிலும் மூலிகைக் கசாயம் வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி படக்குழுவினருக்கு அவரது வழிகாட்டுதலின்படி ஆரோக்கியமான உணவு முறையும் பின்பற்றப்படுகிறது.
கொரோனா தொற்றிலிருந்து படக்குழுவினரைப் பாதுகாக்க, படப்பிடிப்புத் தளத்திலேயே மருத்துவக் குழுவினர் கூடவே இருந்து, கவனித்துக் கொள்வது என்பது இதுதான் முதல் முறை.